பிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள
ஒவ்வொருவருக்கும் நமக்குரிய அதிஷ்டம் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதை பிறந்த தேதி வைத்து, நியூமராலஜி எனப்படும் எண்கணித முறைப்படி அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக்கல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
இந்த அதிர்ஷ்ட எண் வரும்படி அவர்களுக்கான எண்களைத் தேர்வு செய்து கொள்வதாலும், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட அதிர்ஷ்ட நிறங்களைத் தேர்வு செய்து கொள்வதன் மூலமும், அதிர்ஷ்டக்கல் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வதன் மூலமும் அதிர்ஷ்ட பலன்களை அடைய முடியும்.
இது போல் துரதிர்ஷ்டமான நிறங்கள், எண்களையும் ஒதுக்கி விட வேண்டும்.
பிறந்த தேதியும் அதிர்ஷ்ட, துரதிர்ஷ்ட நிறங்களும் :
ஆங்கில தேதி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 1, 9
அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு, வெளிர்சிவப்பு, மஞ்சள், பொன்னிறம்
அதிர்ஷ்டக் கல் – தங்கம், மாணிக்கம்
துரதிர்ஷ்ட எண் – 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர்
ஆங்கில தேதி 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 7, 1
அதிர்ஷ்ட நிறம் – வெளிர் மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்டக் கல் – முத்து
தரதிர்ஷ்ட எண் – 9, 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம்
ஆங்கில தேதி 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 3, 1, 9
அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு, ரோஸ், தாமரைப்பூ நிறம்
அதிர்ஷ்டக் கல் – செவ்வந்திக்கல், புஷ்பராகம்
துரதிர்ஷ்ட எண் – 6
துரதிர்ஷ்ட நிறம் – கருநீலம், கருப்பு ஆழ்ந்த பச்சை
ஆங்கில தேதி 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 1, 9
அதிர்ஷ்ட நிறம் – வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்டக் கல் – கோமேதகம்
துரதிர்ஷ்ட எண் – 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு
ஆங்கில தேதி 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 5
அதிர்ஷ்ட நிறம் – சாம்பல்
அதிர்ஷ்டக் கல் – வைரம்
துரதிர்ஷ்ட எண் – இல்லை.
துரதிர்ஷ்ட நிறம் – பச்சை, கருப்பு
ஆங்கில தேதி 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 6, 9
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, மஞ்சள், ரோஸ்
அதிர்ஷ்டக் கல் – மரகதம்
துரதிர்ஷ்ட எண் – 3
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர்
ஆங்கில தேதி 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 2, 1
அதிர்ஷ்ட நிறம் – இலேசான மஞ்சள், வெளிர்பச்சை, நீலம், வெள்ளை
அதிர்ஷ்டக் கல் – வைடூரியம்
துரதிர்ஷ்ட எண் – 7
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, சிகப்பு
ஆங்கில தேதி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 1, 5
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், ஆழ்ந்த பச்சை, நீலம்
அதிர்ஷ்டக் கல் – நீலக்கல்
துரதிர்ஷ்ட எண் – 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர், சிவப்பு
ஆங்கில தேதி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 9, 1
அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு, கருஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்டக் கல் – பவளம்
துரதிர்ஷ்ட எண் – 2
துரதிர்ஷ்ட நிறம் – வெளிர் பச்சை, வெண்மை மிகுந்த வர்ணம்
LIKE OUR FB PAGE TamilHackings.fb.com
Birthdate number 8 and his bad luck number 8 ?????!?! How come ?!?!?
ReplyDeleteBirthdate number 8 and his bad luck number 8 ?????!?! How come ?!?!?
ReplyDeleteBad luck for u bro
ReplyDelete