Saturday, 29 August 2015

ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் முழு வேலைநாள்

ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் முழு வேலைநாள்

வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது. இந்த முடிவு, செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பொதுத்துறை, தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை ஆகும். மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், அவை முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Like our fb page Click

No comments:

Post a Comment