Sunday, 30 August 2015

Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்து விட்டது.


Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்து விட்டது.
============================================
ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015 ஆண்டில் இறுதியில் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பின் Google Now Launcher இப்பவே வெளிவந்து விட்டது. இதனை டவுன்லோட் செய்து உங்கள் மொபைல்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.(பார்க்க பதிவு: Android 6.0 Marshmallow - புதிய மாற்றங்கள் என்ன.?)
Google Now Launcher பல புதிய வசதிகள் இருக்கிறது. மேலும் Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான அத்தனை வால்பேப்பர்களும் இதிலேயே இருக்கு. டெஸ்க்டாப் ஸ்கிரீனில் இடது பக்கம் ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் Google Now கார்ட் வருகிறது. அதில் நமக்கு வேண்டிய நினைவூட்டகூடிய விஷயங்களை அடுக்கி வைத்து இருக்கிறது. நான் ஒரு புது மொபைல் ஆர்டர் செய்து இருந்தேன். அந்த மொபைலின் கூரியர் டிராக்கிங் விஷயங்களை ஜிமெயில் மின்னஞ்சலில் இருந்து எடுத்து அந்த பார்சல் இப்ப எங்கே இருக்கு, எப்ப உங்களுக்கு கிடைக்கும் என பட்டியலை தருகிறது. மேலும் வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் எடுத்து இருந்தேன். அதை பற்றிய நினைவூட்டல் கார்ட் ஒன்று டிஸ்ப்ளே செய்கிறது.
டெஸ்க்டாப்ல காலியாக உள்ள இடத்தில் லாங் பிரஸ் செய்தால் மூன்று ஆப்சன் கிடைக்கும். வால்பேப்பர் மாற்ற, காட்ஜெட் மாற்ற, விரைவான செட்டிங்ஸ் வசதிகள் என அசத்தும்படி அமைத்து உள்ளார்கள். கண்டிப்பா அனைவரும் இந்த ஆப் பார்த்து வியந்து போவார்கள்.
நீங்களும் கீழே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என நம்புகிறேன்
Link  click to here

No comments:

Post a Comment