Monday, 24 August 2015

குறைந்த விலையில் எச்.டி.சி. ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் எச்.டி.சி. ஸ்மார்ட்போன்

ஒரு காலத்தில் விலை அதிகமாகத்தான் இருக்கும் என மக்கள் ஒதுங்கிப் போன எச்.டி.சி. மொபைல் போன்கள், தற்போது மக்கள் வாங்கும் கட்டுப்படியாகும் விலையில், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில், அந்த வகையில் வெளியான ஒரு ஸ்மார்ட் போன் எச்.டி.சி. டிசையர் 326 ஜி ஆகும்.
ஆண்ட்ராய்ட் கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இந்த போன் தரப்படுகிறது. பின்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 2 எம்.பி. கேமராவும் இயங்குகின்றன. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் குவாட்கோர் சிப் செயல்படுகிறது. இதன் சிப் செட் Spreadtrum SC7731G . எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் உள்ளன. எம்பி4 மற்றும் எம்பி3 பிளேயர்கள் தரப்பட்டுள்ளன. இதன் பிரவுசர் எச்.டி.எம்.எல். 5 ஆகும். டாகுமெண்ட் வியூவர் செயலி இயங்குகிறது. அத்துடன் போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் செயலியும் செயல்படுகிறது. இரண்டு சிம்கள், 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளில் இயங்குகின்றன.
இதன் பரிமாணம் 139.7 x 69.6 x 9.7 மிமீ. எடை 146 கிராம். பார் வடிவத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அமைப்புடன் இந்த ஸ்மார்ட் போன் இயங்குகிறது.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யூ லேன், புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவை இயங்குகின்றன. வை பி மற்றும் ஹாட் ஸ்பாட் வசதிகளும் உள்ளன. எப்.எம். ரேடியோ இயங்குகிறது.
அக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகிய தொழில் நுட்பங்களும் உள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 524 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 30 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.9,590.
TamilHacking. Fb.com
TamilHackings.blogspot. com
TamilHackings.group.com

No comments:

Post a Comment