இன்று முதல் விஜய்யின் புலி ஆண்ட்ராய்டு கேம் டவுன்லோடு செய்யலாம்!
விஜய்யின் புலி படம் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் புலி ரிலீஸ் நாளை பெரிய அளவில் கொண்டாடவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, அப்படத்தின் டீசர், டரைலரை இணையதளங்களில் டிரண்டாக்கியுள்ள விஜய் ரசிகர்கள், இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெளியானபோது, அதை டவுன்லோடு செய்து விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் கத்தி கேமுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்தநிலையில், இன்னும் நான்கே நாட்களில் வெளியாகும் புலி படத்தின் ஆண்ட்ராய்டு கேமும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் புலி கேம் கிடைக்கும் என்று புலி படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, புலி படம் வெளியாகும் கடைசி நிமிடம் வரை ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ள இந்த கேம் பப்ளிசிட்டி இளவட்ட ரசிகர்கள் மத்தியில் புலிக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் என்று கருதும் புலி படக்குழு, கத்தி ஆண்ட்ராய்டு கேமை விடவும் இந்த புலி கேமை அதிகப்படியான ரசிகர்கள் டவுன்லோடு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இதோ டவுன்லோடு லிங்க் புலி படம் கேம் லிங்க்
LIKE OUR FB PAGE TamilHackings
No comments:
Post a Comment