Tuesday, 13 October 2015

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை: ஐந்து நாளில் 3 ஆயிரம் கோடி இலக்கு

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை: ஐந்து நாளில் 3 ஆயிரம் கோடி இலக்கு



ஆன்லைனில் பொருள் வாங்குபவர்களால் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை மறக்க முடியாது.

ஆயிரக்காணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரு ரூபாய், 10 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் விற்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல லட்சம் பேர் தங்கள் கணினி முன்பும், செல்போன்களுடனும் தயாராக இருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. எல்லா பொருட்களும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட, வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பொருள் இல்லை என கையை விரித்தது பிளிப்கார்ட்.

இதனால் கடுப்பான வாடிகையாளர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி அந்த நிறுவனத்தை ஒரு வழியாக்கிவிட்டனர். கடைசியில் பிளிப்கார்ட் நிறுவனர்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், இந்தமுறை அப்படி நடக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுபோல் அல்லாமல் இந்த ஆண்டு பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை 5 நாட்கள் (அக்டோபர் 13 முதல் 17 வரை) நடத்த திட்டமிட்டுள்ளனர். அதுவும் அவர்களின் செயலி (APP) மூலம் மட்டுமே.

இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையின் போது சுமார் 500 மில்லியன் டாலர் (3250 கோடி ரூபாய்) விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற விற்பனையில் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டை போல அதிரடி விலை குறைப்புகள் இல்லாமல், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பயன்பெரும் வகையில் சலுகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக பிளிப்கார் நிறுவனத்தின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், 5 நாட்கள் நடைபெறும் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது அந்நிறுவனம்.


Flipkart Big Billion Day Sale 2015 Bank Offers (Get 10% Extra OFF )

10%  Extra OFF Offer Valid on following Banks :-

1. State Bank of India

2. Citi Bank

3. Standard Chartered Bank

4. Yes Bank



Flipkart Big Billion Day Sale 2015 Offers Full List Date Wise


Offers List/Details Date Wise:-

13th – 17th Oct : Fashion Sale .

14th – 17th Oct : Sale on Home & Appliances.

15th – 17 Oct : Sales & Offers on Electronics & Automotive .

17th Oct : Offers on Books.


பிக் பில்லியன் ஆப்பர்களை அப்ளிகேசன் மூலம் பெற

 இங்கே கிளிக் செய்து டவுண்லோடு செய்யலாம்



கனினி மூலம் பொருட்களை பெற

 இங்கே கிளிக் செய்து பெறலாம்

LIKE OUR FB PAGE TamilHackings

No comments:

Post a Comment