Sunday, 3 July 2016

செல்போன் இணைய வேகத்தை கண்டறிய புதிய ஆஃப்



செல்போன் இணைய வேகத்தை கண்டறிய புதிய ஆஃப்

வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் இணைய வேகத்தை அளவிடுவதற்காக புதிய ஆப் ஒன்றை டிராய் அறிமுகம் செய்துள்ளது.

'மைஸ்பீட் ஆப்' எனும் இந்த ஆப்-பை மொபைல் சேவா ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணைய சேவையின் வேகம் குறித்து அறியவும், அது குறித்து டிராயின் போர்ட்டலுக்கு தகவல் அனுப்பவும் உதவும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், டிராய் போர்ட்டல் மற்றும் இந்த ஆப் இரண்டும் வருகிற ஜூலை 5 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என டிராய் தெரிவித்துள்ளது.

இந்த ஆப் மூலம் இணைய வேகம், போனுடன் சேர்ந்த நெட்வொர்க் தகவல் மற்றும் வாடிககியாளர்கள் இருக்கும் இடம் உள்ளிட்டவை குறித்தும் தகவலும் அனுப்ப முடியும். அதேநேரம், குறைந்தபட்ச இணைய வேக சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என டிராய் நிர்ணயித்துள்ளது.

ஆப் இல்லாமல் உங்கள் மொபைல் இணையத்தின் வேகத்தை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்செய்யவும்

No comments:

Post a Comment