இனி செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கட் ஆனால் இழப்பீடு கிடைக்கும்
செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டால் கட்டணம் வசூலிக்க கூடாது என்று இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.
செல்போனில் பேசி கொண்டிருக்கும் போதே சிக்னல் கோளாறு காரணமாக பேசுவதில் தடை ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு முன்னதாக, பிரதமர் மோடி உத்தரவிட்டுருந்தார்.
இது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை டிராய் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தனது பரிந்துரை அறிக்கையை டிராய் அளித்துள்ளது.
இது குறித்து டிராய் வரைவு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென அழைப்பு தடைபட்டால் கட்டணம் வசூலிக்க கூடாது. அதன் தடையை ஈடு செய்ய இலவசமாக கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும், அல்லது கட்டணத்தை திருப்பி செலுத்திவிட வேண்டும்.அழைப்பு வந்த முதல் 5 விநாடிகளிலேயே தடைபட்டால் அந்த அழைப்புக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என பல்வேறு பரிந்துரைகள் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து டிராய் தனது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
Like our fb page TamilHackings

No comments:
Post a Comment