Friday, 9 October 2015

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.



சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்ப முடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம். படத்தில் பாருங்கள். டேட்டா அணைக்கப்பட்டு உள்ளது. வைஃபை இல்லை. ஆனால் மெசேஜ் மற்றும் வீடியோகளை இணையம் இல்லாமல் பெற முடிகிறது. இது ஒரு புதிய புரட்சிதானே? இந்த பதிவில் Hike Messenger வழங்கும் Wifi Direct ஆப்சன் பற்றி பார்ப்போம்.

Hike Direct என்றால் என்ன?

இது WiFi Direct மூலம் இயங்குகிறது. இப்ப வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த WiFi Direct ஆப்சன் இருக்கு. உலகம் முழுவதும் 70  மில்லியனுக்கும் அதிகமானவர்களை இதில் இணைக்க முடியும். எனவே எவ்வித இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Hike நெட்வொர்க் மூலம் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும் என்று Hike Messenger நிறுவனர் கவின் பாரதி மிட்டல் தெரிவித்து இருக்கிறார்.


Wi-Fi Direct என்றால் என்ன?

இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct வசதி இருந்தாலே போதுமானது. இதன் மூலம் மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), பெர்சனல் கணினி போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் புதிதாக மேம்படுத்தி உள்ள Hike Messenger இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பை துண்டியுங்கள். அதன் பிறகு Hike ஓபன் செய்து ஒரு நண்பரின் பெயரில் டச் செய்து மெனுவில் சென்று (மேலே படத்தில் உள்ளவாறு) Hike Direct கிளிக் செய்யுங்கள். உங்கள் நண்பருக்கு இணைப்பை ஏற்படுத்தும் எனவே உங்கள் நண்பரிடமும் புதிய Hike Messenger இருக்க வேண்டும் அவர் Accept செய்ய வேண்டும். இனி நீங்கள் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும்.
Download Hike Messenger Direct, plz used Opera mini or crome


Download Hike Messenger Mirror - Google play (FOR MOBILE USERS - OPEN THIS LINK IN UC BROWSER > WAIT 5 SEC> CLICK SKIP AD> AND SEE THE POST)


நன்றி: ThagavalGuru.com

LIKE OUR FB PAGE
TamilHackings

No comments:

Post a Comment