Monday, 31 August 2015

கம்ப்யூட்டலிருந்து ஸ்மார்ட்போன்க்கு கேபிள் இல்லாமல் பைல்களை அனுப்புவது எப்படி?


கம்ப்யூட்டலிருந்து ஸ்மார்ட்போன்க்கு கேபிள் இல்லாமல் பைல்களை அனுப்புவது எப்படி?
நீண்ட நாட்களாக பலர் என்னிடம் கேட்ட கேள்வி கணினியிலிருந்து ஸ்மார்ட்போன்க்கு பைல் அனுப்ப என்ன வழி. உதாரணத்திற்கு நீங்கள் போட்டோ அல்லது பாடலை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து அதனை ஸ்மார்ட்போன்கு மாற்ற ஜிமெயில் மூலம் அப்லோட் செய்து பின்பு உங்கள் ஸ்மார்ட்போன்க்கு டவுன்லோட் செய்யலாம் அல்லது டேட்டா கேபிள் மூலம் அனுப்பலாம்.




இதை தவிர்த்து எந்த வித கேபிள் இல்லாமல் கணினியிலிருந்து ஸ்மார்ட்போன்க்கு பைல் அனுப்ப உள்ள அப்ப்ளிகேசன் தான் AirDroidAirDroid
இந்த அப்ப்ளிகேசனை உங்கள் போன் மற்றும் டெஸ்க்டாப் கணினியில் இன்ஸ்டால் செய்தால் போதும். நீங்கள் உங்கள் பைல்களை டெஸ்க்டாப் அப்ப்ளிகேசனில்  டிராக் செய்தால் உங்கள் போனுக்கு உடனடியாக டவுன்லோட் செய்யப்படும். 




AirDroid பயன்படுத்துவது எப்படி?




1. ஸ்மார்ட்போனில்   AirDroid மொபைல் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யவும் 








2.  கணினியில் AirDroid டெஸ்க்டாப் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யவும்


                Desktop Software Link :   CLICK



3.  பைல்களை  AirDroid டெஸ்க்டாப் அப்ப்ளிகேசனில் அப்லோட் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் ஆகும்.



குறிப்பு:



ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் ஒரே Wifi அல்லது LAN எனில் தகவல் எளிதாக செல்லும். வேறொரு இடத்தில இணையவழி தடம் எனில் சிறுது நாட்கள் கூட ஆகும்.



இந்த செய்தி உங்கள் வெகு நாள் கேள்விக்கு விடையாக அமையும் என நம்புகிறேன்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்



வெறும் 4,990 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படும் Android 5.1 Lollipop மற்றும் 4G வசதி கொண்ட Lenovo ஸ்மார்ட் போன்


வெறும் 4,990 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படும் Android 5.1 Lollipop மற்றும் 4G வசதி கொண்ட Lenovo ஸ்மார்ட் போன்


இது Lenovo நிறுவனம் மலிவு விலையில் அறிமுகப்படுத்தும் ஒரு ஸ்மார்ட் போன் ஆகும்.



 A2010 என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இது Android இன் புதிய இயங்குதளமான Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.


மேலும் 4.5 அங்குல திரையை கொண்டுள்ள இது 1.0GHz வேகத்தில் இயங்கக்கூடிய Quad-core MediaTek MT6735M 64-bit processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.

அத்துடன் 8GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி மேலும் 32GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.


Dual SIM வசதி கொண்டுள்ள இது 2MP தெளிவுத்திறனில் அமைந்த முன்பக்க Camera ஐ கொண்டுள்ள அதே நேரம் 5MP தெளிவுத்திறனுடைய பிரதான Camera ஐ கொண்டுள்ளது.

4G LTE வலையமைப்புக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய இது WiFi, Bluetooth 4.0, GPS போன்ற வசதிகளுடன் 2000mAh வலுவுடைய Battery ஐ கொண்டுள்ளது.



இவைகள் தவிர 66.5 மில்லிமீட்டர் நீளம், 131.5 மில்லிமீட்டர் அகலம் 9.9 மில்லிமீட்டர் தடிப்பை கொண்டுள்ள இதன் நிறை 137 கிராம் ஆகும்.

குறைந்த விலையில் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த பயனளிக்கும். இதன் விலை 4,990 இந்திய ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 76 அமெரிக்க டொலர்கள் ஆகும்ஆகும்
அதனைப்பற்றி முழுமையாக அறிய,
முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
 நமது ப்்ளாக் பற்றிய கருத்துக்களை பதிவிடுங்கள்
பேஷ்புக்கள் பகிர கிளிக் செய்யவும்

Adv Permission Manager (Pro) v3.3.12 வணக்கம் நண்பர்களே அனைத்த ஆஆன்ராய்ட்் மொபைல்க்கும்தேவையான அப்ளிகேசன்,


Adv Permission Manager (Pro) v3.3.12
வணக்கம் நண்பர்களே அனைத்து ஆன்ராய்ட் மொபைல்க்கும் தேவையான அப்ளிகேசன், இதன் மதிப்பு ரூ 350, ஆனால் நமது தளத்தில் இலவசமாக, அட இதை டவுன்ட்லோட் தான் பன்னிபாருங்களேன்

Root செய்யாமலே உங்கள் மொபைலை root செய்யாமலே ரூட் செய்தது போல ஆக்க வேண்டுமா?. அதற்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் தான் Adv(Advanced) permission manager.
இதன் மூலம் தேவையற்ற அப்ளிகேஷன் run ஆவதை தவிர்க்கலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் தனிதனியாக permission set செய்யலாம்.
System applicationகளை delete செய்யலாம்.
இன்னும் நிறைய பயன்பாடுகள் உள்ளன்.
Rs 350 மதிபுள்ள இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Direct doenkod Google play LIKE HERE

FREE LINK HERE
Like fb Page TamilHackings

Sunday, 30 August 2015

Battery Saver Pro 2.1.6 Version 150 Rs மதிப்பிளான அப்ளிகேசன் இலவசமாக பெற!!!


Battery Saver Pro 2.1.6
Hi Friends .
உங்களது Android Mobileல் Battery பயன்பாட்டை கட்டு படுத்தவும், சீக்கரமாக பேட்டரி அளவு குறைவதை தடுக்கவும் உதவும் ஒரு அப்ளிகேஷன் தான் இந்த Battery saver pro.
இதன் மூலம் உங்களது பேட்டரி பயன்பாட்டை குறைப்பதுடன் உங்ககளது இணைய பயன்பாட்டையும் கட்டு படுத்தலாம்.
தேவையற்ற அப்ளிகேஷன் தானாக வேலை செய்து உங்கள் மொபைல் டேடா வை குறைப்பதையும் கட்டுபடுத்தலாம்.
$1.49 மதிபுள்ள இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Battery Saver Pro – Save your Battery!-
Direct google download CLICK HERE
Our Free download link Click Here

Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்து விட்டது.


Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்து விட்டது.
============================================
ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015 ஆண்டில் இறுதியில் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பின் Google Now Launcher இப்பவே வெளிவந்து விட்டது. இதனை டவுன்லோட் செய்து உங்கள் மொபைல்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.(பார்க்க பதிவு: Android 6.0 Marshmallow - புதிய மாற்றங்கள் என்ன.?)
Google Now Launcher பல புதிய வசதிகள் இருக்கிறது. மேலும் Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான அத்தனை வால்பேப்பர்களும் இதிலேயே இருக்கு. டெஸ்க்டாப் ஸ்கிரீனில் இடது பக்கம் ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் Google Now கார்ட் வருகிறது. அதில் நமக்கு வேண்டிய நினைவூட்டகூடிய விஷயங்களை அடுக்கி வைத்து இருக்கிறது. நான் ஒரு புது மொபைல் ஆர்டர் செய்து இருந்தேன். அந்த மொபைலின் கூரியர் டிராக்கிங் விஷயங்களை ஜிமெயில் மின்னஞ்சலில் இருந்து எடுத்து அந்த பார்சல் இப்ப எங்கே இருக்கு, எப்ப உங்களுக்கு கிடைக்கும் என பட்டியலை தருகிறது. மேலும் வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் எடுத்து இருந்தேன். அதை பற்றிய நினைவூட்டல் கார்ட் ஒன்று டிஸ்ப்ளே செய்கிறது.
டெஸ்க்டாப்ல காலியாக உள்ள இடத்தில் லாங் பிரஸ் செய்தால் மூன்று ஆப்சன் கிடைக்கும். வால்பேப்பர் மாற்ற, காட்ஜெட் மாற்ற, விரைவான செட்டிங்ஸ் வசதிகள் என அசத்தும்படி அமைத்து உள்ளார்கள். கண்டிப்பா அனைவரும் இந்த ஆப் பார்த்து வியந்து போவார்கள்.
நீங்களும் கீழே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என நம்புகிறேன்
Link  click to here

Saturday, 29 August 2015

உங்கள் மொபைலில் எடுத்த போட்டோக்களைமேலும் அழகு படுத்தும் ஒரு சிறந்த அப்ளிகேசன் 450 ரூபாய் மதிப்புள்ளது, இலவசமாக நமது தமிழ்ஹேக்க்ஷ்ல் மட்டும்


Pro capture
Hi Friends.
உங்களது Android Mobileல் அழகாக போட்டோ மற்றும் விடியோ எடுக்கவும் அதனை உடனுக்குடன் எடிட் செய்து கொள்ளவும் உதவும் ஒரு அப்ளிகேஷன்.
$5.59 மதிப்புள்ள இந்த அப்ளிகேஷன்
இலவசமாக பெற கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Download link
Or googleplay Link

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்


மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்



நாமினி!

"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ அ்ல்லது கிளிக்என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும்.

இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும்.  http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& or இங்கே கிளிக் செய்யவும் என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!

பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541

நிரந்தரக் கணக்கு எண்!

பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php or click என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”
Like our fb page click here

ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் முழு வேலைநாள்

ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் முழு வேலைநாள்

வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது. இந்த முடிவு, செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பொதுத்துறை, தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை ஆகும். மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், அவை முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Like our fb page Click

Friday, 28 August 2015

ANDROID MOBILE ல் ANTIVIRUS அவசியம்தானா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!



ANDROID MOBILE ல் ANTIVIRUS அவசியம்தானா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!



     Android மொபைல்களில் Anti Virus Install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர்  (யாருக்கு தெரியும்friends எல்லாரும் சொன்னாய்ங்க அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும, இது ஒரு Virusa கூட புடுச்சதில்ல சாமி )என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில்anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்.



  நானும் அதைத்தான் கூறுகிறேன் .நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான் உபயோகிக்கும்AntiVirus மென்பொருள் சில
Applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட
அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது.


 Android என்பது ஒரு secure செய்யப்பட்ட OS இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்
ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம் இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார் சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன்
virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என
யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ? அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க
முழுக்க சோதித்த பின்னரே இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன் anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை புரிய வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள் இதனை உடனே uninstall செய்துவிடுங்கள் வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்
Like our fb page  Click here

(Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்!

(Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்! 


இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?

வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது.

அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?

லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும்  பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.

லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.

வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.

வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில்  பகிர்ந்து கொண்டுள்ளார்.

இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.

மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!
Like our fb page click

டிஜிட்டல் இந்தியா’ தரும் வேலையும் கல்வியும் - தி இந்து


‘டிஜிட்டல் இந்தியா’ தரும் வேலையும் கல்வியும் - தி இந்து

முன்பெல்லாம் மின்சாரக் கட்டணம் உள்பட அரசு அலுவலகங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கட்டுவதற்கு நமது நேரமும் உழைப்பும் வீணாகும். நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்போம். தற்போது உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பணத்தை ஒரு கிளிக்கில் அனுப்பிவிட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள். அரசின் செயல்பாடுகள் நவீனமாவது மக்களுக்கு நல்லதுதானே!

நவீனமான அரசு நிர்வாகத்தை இப்போது ‘இ-கவர்னன்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த நவீனமும் காலாவதியாகிக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை அதிநவீனத்தை எம்- கவர்னன்ஸ் (மொபைல் கவர்னன்ஸ்) என்று அழைக்கிறார்கள்.

இன்றைய உலகில் பல நாடுகள் இந்த அதிநவீன நிர்வாக முறைக்கு மாறிவருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முன்னேறுவதற்காக ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்கும் இணையம்

உலகளவில் அரசுகளின் செயல்பாடுகளில் இணையத்தின் பங்கு மேலும் மேலும் அதிகரித்துவருகிறது. உலகளவில் இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டிலேயே சுமார் 1,250 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் உள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இது அதிகம். இது இன்னும் ஐந்து வருடத்துக்குள் இரு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்தையும் இணைத்துப் பிணைத்து இணையம் தொடர்ந்து மேலும் மேலும் விரிந்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள்தான் முதுகெலும்பாக இருக்கின்றன. எத்தனையோ அரசுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லக்கூடியதல்ல இந்தத் திட்டம். இது அரசின் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெருந்திட்டம். இந்தத் திட்டம் சரியாக அமலாக்கப்பட்டால் அரசின் செயல்பாடுகளில் ஒரு தலைகீழ் மாற்றத்தை மக்களால் உணர முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அடிப்படையான சில மாற்றங்களை முக்கியமான துறைகளில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எங்கும் எதிலும் ஸ்மார்ட்

மக்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரை விநியோகிப்பது உள்ளிட்ட அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் ‘ஸ்மார்ட் தண்ணீர்’ என்ற பெயரில் மாற்றமடைய உள்ளன. தெருக் குழாய்களில் வரும் தண்ணீரின் தரத்தைக் கண்காணிக்கிற கருவிகள் இனி இருக்கும். அவை புதிதாக உருவாகவுள்ளன. ஆறுகளிலும் குளங்களிலும் அணைகளிலும் உள்ள தண்ணீரைக் கண்காணிப்பதற்கும், தண்ணீர் தொடர்பான பேரழிவு நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பதற்கும் கருவிகள் தயாரிக்கப்படும். அவை முழுவதும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இந்த மொத்த நடைமுறையும் அதிநவீனப்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சுற்றுச்சூழல், ஸ்மார்ட் நலவாழ்வு, ஸ்மார்ட் விவசாயம், ஸ்மார்ட் திடக்கழிவு மேலாண்மை என்ற பெயர்களிலும் அரசின் செயல்பாடுகள் அதிநவீனப்படுத்தப்பட்டு தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன என்கிறது இது பற்றிய அரசின் கொள்கை அறிக்கை.

ஸ்மார்ட் நகரங்கள்

இந்தியாவில் சுமார் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன. இரண்டரை லட்சம் கிராமங்களிலாவது ‘பிராட் பேண்ட்’ இணையத்துக்கான தொடர்பை ஏற்படுத்துவது என்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.

இத்தகைய பிரம்மாண்டமான பணிகளுக்கான உள்கட்டமைப்பு களுக்காக அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து இந்தத் திட்டத்தில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் 100 ஸ்மார்ட் நகரங்களை அறிவித்து அவற்றில் மிக நவீனமான வசதிகளை உருவாக்குவது இதன் நோக்கம். தமிழகத்திலும் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலும் வேலையும்

இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறது மத்திய அரசு. அதி நவீன மின்னணுக் கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்திசெய்ய வேண்டும் என்றும் அரசு முயல்கிறது. தற்போது இந்தியாவுக்குத் தேவையான மின்னணுப் பொருள்களில் 65 சதவீதம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இத்தகைய உற்பத்தியைச் செய்ய முயல்பவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் சலுகைகளையும் அரசு அளிக்கும். உற்பத்திப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்யவும் உள்ளது.

புதிய கல்வி வாய்ப்புகள்

தற்போதுள்ள பொறியியல் பாடத்திட்டத்தில் பி.டெக். எம்.டெக். அளவிலும், டாக்டர் பட்டம் உள்ளிட்ட, ஆராய்ச்சிப் படிப்புகளின் அளவிலும் ‘இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடமும்’ இணைக்கப்படவுள்ளது.

இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடம் தொடர்பான படிப்புகளில் 6 வாரங்கள், மற்றும் 2 வாரங்களில் படிக்கக்கூடிய சான்றிதழ் படிப்புகளும் கல்வி நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்து அவற்றைச் சமர்ப்பிப்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தகவல்தொழில் நுட்பத் திறன் படைத்தவர்களாக ஒரு கோடி மாணவர்களை உருவாக்குவதற்கு அரசு முயல்கிறது என்கிறது மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை.

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் திறன்மிக்க முறையில் செயல்படுத்தி மேம்படுத்துவதற்கு இத்தகைய மாணவர்களிலிருந்து உருவாகும் ஊழியர்களே அடித்தளமாக இருப்பார்கள்.

கல்வியும் தொழிலும்

தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே இது தொடர்பான மாநாடுகளும் பயிலரங்குகளும் நடத்தப்படவுள்ளன. ஐ.ஐ.டி. நிறுவனங்களில் எம்.டெக் அளவிலான இரண்டு வருடக் கால ஆய்வுகளுக்கு உதவித்தொகைகள் வருடந்தோறும் 150 பேருக்கு வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு எந்த வகையான திறன்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து கல்வி நிறுவனங்களில் அவற்றை உருவாக்கும் வகையிலான புதிய பேராசிரியர் பதவிகள் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படவுள்ளன.

தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயலாற்றக்கூடிய புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. கல்வியாளர்களின் அறிவைத் தொழில் நிறுவனங்கள் பெறுவதற்கும் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் புதிய மாற்றங்களின் அனுபவங்களைக் கல்வியாளர்கள் பெறுவதுமாக இருதரப்பும் பயன்பெறும் வகையில் திட்டமிட்ட செயல்பாடுகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன.

கல்வி வளாகங்களிலும் தொழில்நிறுவனங்களிலும் பல புதிய வாய்ப்புகளை டிஜிட்டல் இந்தியா திட்டம் உருவாக்கவே செய்யும்.

உங்கள் கணினியின் இணையதள வேகத்தை எப்படி அதிகரிப்பது

உங்கள் கணினியின் இணையதள வேகத்தை எப்படி அதிகரிப்பது



  • வணக்கம் நண்பர்களே இந்த பதில் எப்படி உங்கள் கணினியின் இணையதள வேகத்தை அதிகபடுத்டுவது மற்றும் அதே சமயத்தில் data usage அதாவது bandwidth எப்படி குறைப்பது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் 



அதற்கான வழிமுறைகள்:

  • முதலில் windows > Run செல்லுங்கள் அல்லது Start button + R அழுத்துங்கள் அதில் கீழ்கண்ட சொற்றொடரை கொடுங்கள் 

gpedit.msc

  • அடுத்து அதில் Administrative tools > network > Qos pocket scheduler  செல்லுங்கள் 
  • அடுத்து அதில் மூன்று விதமான option கள் தோன்றும் அதில் முதலில் limit outstanding packet என்று இருக்கும் அதை வலது click செய்து edit என்பதை click செய்யவும் அதில் வலது பக்கம் மேலே not configure , enable, disable என்று மூன்று option கள் இருக்கும் அதில் enable என்பதை தேர்வு செய்யவும் 
  •  அப்படியே சற்று கீழே வந்து number of packets என்பதில் 20 கொடுத்து save செய்து விடுங்கள் 

  • இறுதியாக limit resealable bandwidth என்ற option தேர்வு செய்யுங்கள்  வலது click செய்து edit கொடுங்கள் ஏற்கனவே செய்தார் போல இதிலும் enable என்ற option தேர்வு செய்யுங்கள். அதற்கு கீழே bandwidth limit என்பதில் 0 % கொடுக்கவும் அவ்வளவு தான் எல்லா programகளையும் close செய்து விடுங்கள் பிறகு restart செய்து விட்டு பாருங்கள் உங்கள் இணையத்தின் வேகம் அதிகமாகவும் இருக்கும் அதே போல data usage ஆனது அதிகமாக எடுத்து கொள்ளது 
  •  கீழே உள்ள வீடியோவை பாருங்கள் இன்னும் உங்களுக்கு தெளிவாக புரியும் 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!! ஏதும் சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம் like our fb Page Click here

வாக்காளர் அடையாள அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

வாக்காளர் அடையாள அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !


அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று.வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள்... 
 
வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே / எப்படி விண்ணப்பிப்பது ?
மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். 
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்), வட்டாட்சியர் அலுவலகம் (துணை வாக்காளர் பதிவு அலுவலர் ) ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். 
உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை 
http://www.elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS1.pdf இத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையுமெனில், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு இப்போது விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்த வேண்டும். படிவம் - 6 உடன், ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படம் இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் 
வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம் அல்லது நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்
உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா. - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்-8 ஐ பயன்படுத்த வேண்டும்.
 
வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம். 
1.முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
2.பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.
3.அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும். 
4.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.


ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது ?
http://eci-citizenservices.nic.in/default.aspx இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். 
http://www.elections.tn.gov.in/eregistration/ இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். 
உங்கள் விண்ணப்பத்தின் நிலையை http://elections.tn.gov.in/apptrack/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 
http://www.elections.tn.gov.in/contacts/ இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம். 
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 
மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.

ஆப்பிள் ஐபோன் 6s செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம்அறிமுகம்!!

ஆப்பிள் ஐபோன் 6s செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம்

கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக விளங்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம் ஐபோன் எனப்படும் நவீனரக கைபேசி விற்பனையிலும் கொடிகட்டி பறந்து வருகின்றது.

ஏற்கனவே, 6 மற்றும் 6 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் வெளியிட்ட இருரக ஐபோன்களுக்கும் சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி நிலவிவரும் நிலையில், இதன் அடுத்தகட்டமாக ‘iPhone 6S, iPhone 6S Plus’ என்ற இரு நவீன ரக ஐபோன்களை வெளியிடப் போவதாக ஆப்பிள் அறிவித்திருந்தது.

இந்நிலையில், “செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறும் எங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விழாவுக்கு வருகை தந்து சிறப்பியுங்கள்” என ஊடகங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அழைப்பு அனுப்பியுள்ளது. இந்த அழைப்பை வைத்துப் பார்க்கும்போது வரும் ஒன்பதாம் தேதி ‘iPhone 6S, iPhone 6S Plus’ ஆகியவற்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என நம்பப்படுகிறது.

விரல்ரேகை மூலம் செயல்படும் ஸ்கேனர் மூலம் உயிர்ப்பு பெறும் திரையின் செயல்பாடு, 2-ஜிபி ரேம், இமேஜ் சென்சர்களுடன் கூடிய 12 மெகாபிக்சல் கேமரா, முன்பக்க கேமரா பிளாஷ் என ஏகப்பட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகமாகவுள்ள ‘iPhone 6S, iPhone 6S Plus’ இரண்டுமே தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் ஒரு புதிய மைல்கல்லாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Apple iPhone 6 and  6plus  வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Our facebook page Click here

ஏன் நிறைய பேர் gmail மட்டும் தேர்ந்தெடுக்கின்றனர்

ஏன் நிறைய பேர் gmail மட்டும் தேர்ந்தெடுக்கின்றனர்
Click to g mail sign up page


வணக்கம், ஏன் நிறைய பேர் google மின்னஞ்சலை தேர்ந்தெடுக்கின்றனர். yahoo, red-diff என்று பல இருக்கையில் இதை மட்டும் ஏன் த்ர்ந்தேடுக்க வேண்டும். சரி அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  ஜிமெயில்: இது google நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. google தற்போது நிறைய தயரிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை Blogger, Maps, Translator,  google plus, YouTube  இன்னும் பல இவை  நாம் பதிவு செய்து தான் நாம் அதை பயன்படுத்த  முடியும்.

நீங்கள் google தயாரிப்புகளில் செல்லும் போது அதற்கு google கணக்கு தேவைப்படும். நீங்கள் gmail வைத்திருந்தால் நேரடியாக உள்ளே நுழையலாம். yahoo கணக்கு  நீங்கள் உள்ளே நுழைவது ஏற்கபடமாட்டது.

ஆனால் இந்த வகையான தயாரிப்புகளை yahoo நிறுவனம் வெளியிடவில்லை. google மட்டுமே இதை வெளியிட்டுள்ளது. yahoo அதிகம் பயன்படுத்தும் இடம் ஜப்பானில் மட்டுமே.

ஆனால் இமெயில் பொருத்தவரை yahoo தான் சிறந்த இணைய அடிப்படையிலான மின்னஞ்சலாக உள்ளது. எப்படி இருந்தால் என்ன இதில் ஒரு கணக்கு அதில் ஒரு கணக்கு வைத்திருங்கள். காசா பணமா எல்லாம் இலவசம் தானே....!!!......!!!......!!!
Our Facebook page Click
Ckick here

Thursday, 27 August 2015

வாட்ஸப் நியூ வெர்ஷன்!



வாட்ஸப் நியூ வெர்ஷன்! இதில் உண்டு உபயம் + அபாயம்
--------------------------------------------------------------------

வாட்ஸப் வெர்ஷன் 2.12.5 நிறைய புது வசதிகளை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் இது நிறைய பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது மாற்றுக்கருத்தல்ல. இது எப்படி என்றால் இந்த வகை வெர்ஷன் உங்களின் அனைத்து வீடியோக்களையும்பத்திரமாக கிளவுட்டில் சேமித்து வைக்கும். இதில் நீங்கள் வீடியோவை பார்த்து அழித்து விட்டாலும் ஆட்டோ பேக்கப் ஆப்ஷனில் இந்த வீடியோ அப்படியே இருக்கும்.நாளை வேறு யார் கையில் இந்த ஃபோன் மாட்டினாலும் / அல்லது உங்கள் மொபைல் நம்பர் மாறினாலும் இந்த வீடியோ பத்திரமாக இருக்கும் அபாயம் மற்றும் உபயம் இரண்டும் உண்டு. இது போக தாங்கள் தற்போது இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேரிங் வசதியை அப்படியே அப்பிள் மேப்ஸில் இருந்து உலகின் எந்த ஒரு மூலையின் இருந்து உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்லலாம். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை இரு அட்ரஸ்கேட்டு அனுப்புறேன்னு சொல்ல வேண்டியது இல்லை.

ஜஸ்ட் லொகேஷன் ஷேர் செய்தால் போதுமானது அவர்களை ஜிபிஎஸ் மூலம் நீங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டு வந்து விடும் அற்புதமான ஒன்று ஆனாலும் இதுவும் ஆபத்தான ஒன்று தப்பான ஆட்களுக்கு என்பது உண்மை.

Whatsapp Latest Version 2,12,5 has more trouble than advantage.

மொபைல் Hang ஆனால் என்ன செய்யலாம்??

மொபைல் Hang ஆனால் என்ன செய்யலாம்??


மொபைல் Hang ஆனால் என்ன செய்யலாம்??
-------------------------------------------------------------------

ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களை காண்பது மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான். அடிக்கடி மொபைல் ஹேங் ஆகி கடுப்பேற்றும். இது ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஏன் ஆப்பிளின் ஐ ஃபோன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

திடீரென நமது மொபைல் ஹேங் ஆகிவிட்டால் என்ன செய்யலாம் என பார்க்கலாம். முதலில் உங்க போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் முறைகளை பின்பற்றுங்கள் பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்.

ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லையெனில், தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை பிரஸ் செய்யவும். அவ்வாறு ரீஸ்டார்ட் செய்ய முடிய வில்லை எனில் ஃபோனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்.

உங்க போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள். ஹேங்கான பின் ஃபோன் ஆன் ஆகவில்லை என்றால் பேக்ட்ரி ரீசெட் செய்யவும், இது உங்க போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும்.ஆனால் இப்படி செய்வதன் மூலம், ஃபோனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும்.

இது பொதுவாக அனைவரும் அறிந்த விஷயங்கள்தான். என்றாலும் கூட பெரும்பாலனோர் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர்

Wednesday, 26 August 2015

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !! உபயோகமான தகவல்கள் !!

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !! உபயோகமான தகவல்கள் !!

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !! உபயோகமான தகவல்கள் !!

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதை எப்படி பத்திரமாக வைப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் பணம் எடுக்க, வேறு கணக்கிற்கு அனுப்ப வங்கிக்கு போக பலருக்கு நேரமில்லை. அதனால் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கிறார்கள், இன்டர்நெட் பாங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். தற்போது பலர் போன் பாங்கிங் செய்கின்றனர். அதாவது இன்டர்நெட் வசிதியுள்ள செல்போனில் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

இன்டர்நெட் பாங்கிங் , போன் பாங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

1. யாராவது உங்களுக்கு போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்கள் கேட்கும் தகவலைக் கொடுத்து விடாதீர்கள். மாறாக நீங்களே வங்கிக்கு போன் செய்யுங்கள்

2. ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் ஒரே பின் நம்பரை வைக்காதீர்கள்.

3. உங்கள் வங்கிக் கணக்கு பாஸ்வேர்டை கம்ப்யூட்டரில் சேவ் பண்ண வேண்டாம்.

4. போன் பாங்கிங் செய்பவர்கள் போனுக்கு செக்யூரிட்டி லாக் போடுங்கள்.

5. வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் பேசும்போது அதை பிறர் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

6. தேதி அல்லது எண்களை பின் நம்பராக வைக்க வேண்டாம்.

7. இன்டர்நெட் சென்டருக்கு சென்று ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்தால் அதை யாராவது பார்க்கிறார்களா என்று கவனிக்கவும். பரிவர்த்தனை முடிந்த பிறகு வங்கிக் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம் 
உங்கள் கருத்துகளை பகிகருங்கள்,, 

Tuesday, 25 August 2015

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவது

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவது

  • வணக்கம் நண்பர்களே இன்று ஒரு பயனுள்ள தகவலோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது இணையம் சேவை உலகெங்கும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் இப்போது எல்லாமே ஆன்லைன் மூலம் பெறலாம். 

  •  பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எப்படி ஆன்லைன் மூலம் பெறலாம் என்பதை காணலாம்.  இதில் நாம் முழுவதுவாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாது ஆனால் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை print out எடுத்து கொள்ளலாம்.  

சான்றிதழ்களை பெற:  


  • இந்த இணைப்பினை கிளிக் செய்து முதலில் open செய்யுங்கள் உங்களுக்கு திரையில் கீழ்கண்டவாறு தோன்றும் 



  • இதில் உங்களுக்கு முதலில் birth certificateவேண்டுமெனில் birth certificate எனும் button ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது திரையில் கீழ்கண்டவாறு தோன்றும் 

  • சிவப்பு கட்டத்தில்  உள்ளவற்றை fill செய்யுங்கள். பிறகு submit  என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களை போலவே பலர் அந்த தேதியில் பதிவு செய்திருக்கலாம் அதில் உங்களுக்கு தேவையான பெயர் வருகிறதா என்று பாருங்கள். 
  • அப்படி வராத பட்சத்தில்  அதில் advanced search என்பதை பயன்படுத்தி பாருங்கள் அப்படியும் வரவில்லை என்றால் கவலை வேண்டாம் பதிவு அலுவலகத்தில்  சில சமயங்களில் information களை update செய்திருக்க மாட்டார்கள் ஒரு சில நாட்கள் கழித்து இதே போல் தேடி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானது கிடைக்கும் 
  • இதே போல தான் death certificateம் எளிதாக ஆன்லைன் மூலம் பெற்றுகொள்ளுங்கள்  

(நீங்கள் தரவிறக்கம் செய்த print out ஆனது font சில சமயங்களில் தெரியாமல் போகலாம் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த இணைப்பினை கிளிக் செய்து எழுத்துரு(font)னை download செய்து கொள்ளுங்கள்)
பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவது பற்றிய புதிய பதிவுகளுக்க CLICK HERE