Wednesday, 30 September 2015

எப்படி எந்த ஒரு சுமார்ட்போனிலும் (FingerPrint Lock)யை பயன்படுத்தமுடியும்.


நண்பர்களே நம் அன்றாட வாழ்வில் மிகவும் அதிகமாக பயன்படுத்துவது ஆன்ராய்டு சுமார்ட்போன்.இதில் மிகவும் முக்கியமானது பாதுகாப்பு(Safe).ஆகவே எந்த ஓரு சுமார்ட்பபோனிலும் (Fingerprint Lock)யை பயன்படுத்த இந்த அப்ப்பை பயன்படுத்தி (Camera Option)மூலம் நீங்கள் எந்த ஒரு சுமார்ட்போனிலும் (Fingerprint Lock)யை பயன்படுத்தலாம்.முதலில் இந்த Linkல் உள்ள் அப்ப்பை (Download)செய்யுங்கள்.
http://sh.st/biC0a

கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free

கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free




நம்ம இந்தியாவில் ஏறத்தால அனைத்து வீட்டுகணினிகளும் வின்டோஸில் இயங்கும் மென்பொருட்களை யாரும் பணம் கொடுத்து வாங்குவதாக தெரியவில்லை (என்னது பணமா?!). எல்லாமே மென்பொருட்களையும் பணம்கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றால் இந்த அளவிற்க்கு கணினி விற்பனை ஆகியிருக்காது என்று தான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா மென்பொருட்களுக்கும் இலவசமாக நம் கணினியில் இயங்க நம்மாள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளான். அதன் பெயர் தான் CRACKஅல்லது KEYGENஅதை பற்றி எல்லாம் சொல்லவேண்டும் என்றால் அதை எல்லாம் தட்டச்சு செய்ய நேரம் கிடையாது. சுருக்கமாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவி அதை ஆக்டிவேட் செய்யவேண்டும். அதை ஆக்டிவேட் செய்ய மென்பொருள் தயாரித்த நிறுவணத்திற்க்கு கட்டணம் செலுத்திய உடன் அவர்கள் தரும் ரகசிய எண் தருவார்கள். அதை கொண்டு அந்த மென்பொருளை நாம் உபயோகிக்க முடியும். சரி சரி இதல்லாம் எங்களுக்கு தெரியும் மேட்டருக்க வாப்பா என்பது என்காதில் விழுகிறது.

கணினியில் உள்ளது போல நம்  ஆண்ட்ராய்டு போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்குமே என்று தோன்றி Googleல் தேடினேன். (Googleக்கு எதிராக Googleலேயே தேடுவதா!!!) அதன் விளைவாகதான் இந்த பதிவு.


உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் playstore ல் சென்று 4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். அல்லது இங்கே கிளிக் செய்யவும் 4Shared. உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

உதாரணமாக 4Shared Pro என்ற மென்பொருளை ரூ.99 கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் நான் சொன்ன படி தேடி பதிவிறக்கினால் இலவசம்.

இதே போல Rs.953.00 மதிப்புள்ள Next Launcher 3D என்ற மென்பொருளும் இலவசமாக பெறலாம்.

LIKE OUR FB PAGE TamilHackings.fb.com

விரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..!!

விரைவில் வெளியாக இருக்கும் 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்..!!


துவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள் இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகப்பட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
நிலைமை இப்படி இருக்க வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

1. எல்ஜி ஜி5

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.6 இன்ச் குவாட் எச்டி 4கே டிஸ்ப்ளே
2016 ஆம் ஆண்டின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம்
4 / 5 ஜிபி ரேம்
5.1 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா
16, 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4100 எம்ஏஎச் பேட்டரி


2.சியோமி எம்ஐ6

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச் அஸ்ட்ரா எச்டி 4கே டிஸ்ப்ளே
4 / 5 ஜிபி ரேம்
7 எம்பி முன்பக்க கேமரா, 23 எம்பி ப்ரைமரி கேமரா
குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் பிராசஸர்

3.ஏசஸ் சென்ஃபோன் 3

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச் ஐபிஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆடம் குவாட்கோர் பிராசஸர்
5 ஜிபி ரேம்
8 எம்பி முன்பக்க கேமரா, 16 எம்பி ப்ரைமரி கேமரா
3500 எம்ஏஎச் பேட்டரி


4.மான்ஸ்டர் ஸ்மார்ட்போன்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச் 3டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே
5 ஜிபி ரேம்
8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா
3450 எம்ஏஎச் பேட்டரி


5.சோனி எக்ஸ்பீரியா இசட்5

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச் 1080பி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
குவால்காம் குவாட்கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
4 / 5 ஜிபி ரேம்
8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா
16, 32, ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4500 எம்ஏஎச் பேட்டரி


6.வெப்ஸ் டென் ஆக்டேன்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச் எல்டிபிஎஸ் 3டி ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு இயங்குதளம்
5 ஜிபி ரேம்
32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி
3450 எம்ஏஎச் பேட்டரி


7.எச்டிசி ஒன் எம்10 / எச்டிசி ஏரோ

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
4 / 5 ஜிபி ரேம்
5.0 எம்பி முன்பக்க கேமரா, 27 எம்பி ப்ரைமரி கேமரா
64, 128 ஜிபி இன்டர்னல் மெமரி


8.சாம்சங் கேலக்ஸி எஸ்7

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆண்ட்ராய்டு இயங்குதளம்
4 / 5 ஜிபி ரேம்
8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4000 எம்ஏஎச் பேட்டரி


9.சாம்சங் கேலக்ஸி நோட் 6

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
6.0 அல்லது 6.2 இன்ச் குவாட் எச்டி 4கே டிஸ்ப்ளே
5 ஜிபி ரேம்
16 எம்பி முன்பக்க கேமரா, 30 எம்பி ப்ரைமரி கேமரா
16, 32, 64, 128, 256 ஜிபி இன்டர்னல் மெமரி
4500 எம்ஏஎச் பேட்டரி


10.ஒன் ப்ளஸ் 3 / 2.5 / 2 மினி

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.6 இன்ச் ஸ்கிரீன்
4 / 5 ஜிபி ரேம்
5.1 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா
16, 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4100 எம்ஏஎச் பேட்டரி

LIKE OUR FB PAGE TamilHackings.fb.com


Tuesday, 29 September 2015

Yoytube videos களை software இல்லாமல் டவுன்லோடு செய்ய!!!


youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய
பல நண்பர்களுக்கு  youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது

 இதன் மூலம் youtube videoவை உங்களது   browserஇலோ அல்லது  download managerஐயோ கொண்டு எளிமையாக  download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்

(நான்  uc browser  mobile version லில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான  browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)

முதலில் உங்களது  browserல் இருந்து  youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும்   videoவை தேர்வு செய்யுங்கள்

(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் அதனுடைய address barல் அந்த   videoவிற்கான  linkல் உதாரணமாக  m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில்  m.ஐ நீக்கிவிட்டு  ss என்று சேர்த்துக்கொண்டு  (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது.
அடுத்து வரும்  linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய  formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான   formatகளில்  browserலேயோ அல்லது download managerஇலோ  download செய்துவிடலாம்
உபயோகமானது
அனைவருக்கும் பகிருங்கள்பகிருங்கள்

LIKE OUR  FB PAGE TAMILHACKINGS

Sunday, 27 September 2015

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்!!!


பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்!!!

அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி
பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி

கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி

கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.

ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்

மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்

மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்

மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்

மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்

திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.

புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்

பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்)

ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.

மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்
.
உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.

உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்;
ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.

அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.

சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.

சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்

சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்

விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை

விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்

அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.

கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்

பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)

உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி

திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
!

அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம்82,83,84,85


LIKE OUR FB PAGE  TamilHackings.fb.com

Saturday, 26 September 2015

இன்று முதல் விஜய்யின் புலி ஆண்ட்ராய்டு கேம் டவுன்லோடு செய்யலாம்!


இன்று முதல் விஜய்யின் புலி ஆண்ட்ராய்டு கேம் டவுன்லோடு செய்யலாம்!


விஜய்யின் புலி படம் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் புலி ரிலீஸ் நாளை பெரிய அளவில் கொண்டாடவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, அப்படத்தின் டீசர், டரைலரை இணையதளங்களில் டிரண்டாக்கியுள்ள விஜய் ரசிகர்கள், இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெளியானபோது, அதை டவுன்லோடு செய்து விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் கத்தி கேமுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்தநிலையில், இன்னும் நான்கே நாட்களில் வெளியாகும் புலி படத்தின் ஆண்ட்ராய்டு கேமும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் புலி கேம் கிடைக்கும் என்று புலி படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, புலி படம் வெளியாகும் கடைசி நிமிடம் வரை ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ள இந்த கேம் பப்ளிசிட்டி இளவட்ட ரசிகர்கள் மத்தியில் புலிக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் என்று கருதும் புலி படக்குழு, கத்தி ஆண்ட்ராய்டு கேமை விடவும் இந்த புலி கேமை அதிகப்படியான ரசிகர்கள் டவுன்லோடு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.


  இதோ டவுன்லோடு லிங்க் புலி படம் கேம் லிங்க்

LIKE OUR FB PAGE TamilHackings

இமெயிலில் பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்பு பயன்படும் முறை பற்றி தெரிந்துகொள்ள

இமெயிலில் பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப




நாம் பொதுவாக மின்னஞ்சல் மூலமாக 10MBயிலும் குறைவான சிறிய கோப்புக்களையே அனுப்புவதுண்டு. அப்படி கூடுதலான அளவில் போட்டோக்களை அனுப்பவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்வேளையில் பல பகுதிகளாக அனுப்புவது வழமை.ஆனால் வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.
எனவே இவ்வாறான வேளையில் எமக்கு கைகொடுப்பதற்காக பல இணையத்தளங்கள் உள்ளது.
                                         
இதில் நாம் இலவசமாக கோப்புக்களை நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.இத் தளத்துக்கு சென்று முதலில் நீங்கள் அனுப்பவிருக்கும் கோப்புக்களை பதிவேற்ற [Upload] வேண்டும். அதன்பின் அதற்குரிய Direct Link ஐ Copy செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதும்.

வேண்டுமெனில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கு மட்டுந்தான் இக் கோப்பு தெரியவேண்டுமென எண்ணின் அதற்காக கடவுச்சொல்[Password] கொடுக்கும் வசதியையும் மேற்கொள்ளக் கூடியதாய் உள்ளது.

கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அத் தளத்துக்கு செல்லவும்.

                       1.                  http://sendtool.com/

                       2.                  http://www.dropsend.com/ 
     
                       3.                 http://www.filemail.com/

                       4.                www.transferbigfiles.com/

LIKE OUR FB PAGE TamilHackings

Friday, 25 September 2015

அழகான செல்பி எடுக்கு சிறந்த 10 Apps

 அழகான செல்பி எடுக்கு சிறந்த 10 Apps


நண்பர்களே இதோ உங்களுக்காக மிகவும் பிடித்த(RetricaPro)
செல்ப்பி அப்ப் இந்த அப்ப் மூலம் நீங்கள் உங்கள் செல்ப்பிஸ்களை அழகாக எடுத்துக்கொள்ளளாம்.இந்த அப் (Play storeல்) Pro version ஆனால் இங்கே  Freeயாக கிடைக்குதுங்க பாஸ்,  கிழே இருக்கும் Linkல் இருந்து Freeயாக Download செய்துக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் Tamilhackingsல் மட்டும் Like Our Page........

Click to downlod

LIKE OUR FB PAGE TamilHackings

மேலும் சில சிறந்த 7 செல்பி ஆப்ளிகேசன்களை கீழே கிளிக் செய்து இலவசமாக பெறுங்கள்

இங்கே கிளிக் செய்யுங்கள் புது செல்பி உலகத்திற்கு செல்லலாம்

Thursday, 24 September 2015

ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT என்பது,என்ன, ROOT செய்வது எப்படி ?


ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது எப்படி ?


ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது.
அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது.

ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும் பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால் அதை செய்வதினால் நன்மைகள் மற்றும் கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில் இருக்கின்றது என்பதை தெழிவு படுத்ததான் இந்த பதிப்பு இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன் உங்களின் பயனுக்காக ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள் இதை தெறிந்துகொள்வதற்க்கு முன்பு

ROOT என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக ANDROID SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதனால் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ இயலாது ஆனால் ROOT செய்வதனால் SYSTEM FILEஐ முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன் கொண்டுவர முடியும்.

இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும் EXAMBLE சிலரது மொபைல்கலில் தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை அவர்கள் இதனை செய்வதனால் எளிமையாக உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்.
(FONT INSTALL செய்வதையெல்லாம் பின் வரும் பதிப்புகளில் பார்க்கலாம்)

ROOT செய்வது எப்படி MOBILEஐ ROOT செய்வதற்க்கு உங்களிடம் கனினி இருப்பது அவசியம். பின்பு உங்களது மொபைலின் DATA CABLEலும்

1.முதலில் உங்களது கனினியில் இந்த KINGO ANDROID ROOT ஐ INSTALL
செய்துகொள்ளுங்கள்
CLICK TO INSTALL

2.உங்களுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS > USB DEBUGGINGஐ ENABLE செய்துகொள்ளுங்கள்

3.உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ கனினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )

4. இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து

5. கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும்

அவ்வளவுதான் இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT செய்யப்பட்டிருப்பதற்க்கான அடையாளம்

தீமைகள்

ROOT செய்வதினால் SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிடும் என்பதால் PROGRAMING ERASER அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்

ROOT செய்யப்பட்ட MOBILEகளுக்கு அதனுடைய நிறுவனததாரிடமிருந்து WARRENTY உங்களுக்கு கிடைக்கப்பெற மாட்டாது அதனால் WARRENTY காலம் முடியும் தறுவாயில் இதனை செய்வது நல்லது.கம்ப்யூட்டர் இல்லாதவங்க இதை டிரை பண்ணுங்கபண்ணுங்க
More Updates Like our fb page TamilHackings.fb.com

Monday, 21 September 2015

Android சாதனத்தின் Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள உதவும் செயலி

Android சாதனத்தின் Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள உதவும் செயலி


எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Volume button ஆனது Android சாதனத்தில் இருந்து வெளிப்படக் கூடிய ஒலியின் (சத்தம்) அளவை கூட்டிக் குறைப்பதற்காகவே தரப்பட்டுள்ளது.




எனினும் Quick Click எனும் Android சாதனத்துக்கான செயலியானது Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது.




இந்த செயலியின் உதவியுடன் உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய Volume Button களை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ கோப்புக்களை பதிவு செய்யவும், Flashlight ஐ ஒளிரச் செய்யவும், குரல் பதிவுகளை மேற்கொள்ளவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும், அழைப்புக்களை ஏற்படுத்தவும், எந்த ஒரு செயலியையும் திறந்து கொள்ளவும் என ஏராளமான செயற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.

Quick Click செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?


இந்த செயலியை நிறுவி திறந்து கொண்ட பின் Volume Button மூலம் எவ்வாறான செயற்பாட்டை செய்ய விரும்புகிறீர்களோ அதனை தெரிவு செய்ய வேண்டும்.


உதாரணத்திற்கு நீங்கள் Volume Button மூலம் புகைப்படங்களை எடுக்க விரும்பினால் Photo என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர் தோன்றும் அடுத்த பகுதியின் மூலம் குறிப்பிட்ட செயற்பாடு தொடர்பான மேலதிக வசதிகளை தெரிவு செய்து Ready என்பதை சுட்ட வேண்டும்.
உதாரணத்தின் படி நீங்கள் Photo என்பதை தெரிவு செய்திருந்தால், குறிப்பிட்ட புகைப்படம் பிடிக்கப்பட வேண்டிய கேமரா எது? (Back Or Front) அந்த புகைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்? (High, Medium, Low), புகைப்படம் பிடிக்கப்படும் போது Flash மற்றும் Auto-focus வசதி செயற்படுத்தப் பட வேண்டுமா? புகைப்படம் சேமிக்கப்பட வேண்டிய இடம் எது? புகைப்படம் பிடிக்கப்பட்ட பின் குறிப்பிட்ட புகைப்படம் திறக்கப்பட வேண்டுமா? அல்லது Gallery திறக்கப்பட வேண்டுமா? என்பவைகள் தொடர்பான அமைப்புக்களை தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்து தோன்றும் சாளரத்தில் Volume Button அழுத்தப்படும் முறையை தெரிவு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு அந்த சாளரத்தில் தரப்பட்டுள்ள ஒன்றன் பின் ஒன்றான கட்டங்களில் முதல் கட்டத்தில் ஒன்றை "+" ஆகவும் அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள இரண்டாவது கட்டத்தில் "-" என்பதையும் நீங்கள் தெரிவு செய்திருந்தால் குறிப்பிட்ட செயற்பாடானது Volume Button ஐ மேல் ஒரு முறை அழுத்தி விட்டு கீழ் ஒரு முறை அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம் பெரும். (உதாரணத்தின் படி புகைப்படம் பிடிக்கப்படும்)

இதனடிப்படையில் வெவ்வேறு செயற்பாடுகளுக்கும் வெவ்வேறான படிமுறைகளை அமைத்துக்கொள்ளலாம்.

இறுதியாக குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும் போது Vibrate அல்லது சத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனின் அதனை தெரிவு செய்த பின் Finish என்பதை அழுத்த வேண்டும்.


அவ்வளவு தான்.

இனி நீங்கள் இட்ட கட்டளைக்கு ஏற்ப Volume Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெறும்.


நீங்களும் இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக. Ckick to Download QUICKCLICK APPLICATION
Thanks to Infotech Team
LIKE OUR FB PAGE TAMILHACKINGS

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை பார்ப்போம்.
ஏன் Smartphone ?
உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.
விலை (Price) :
எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம்.
இயங்கு தளம் (Operating System) :
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே.
இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும்.
அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.
அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1 OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 4.2 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம். அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும்.
வடிவமைப்பு, டிஸ்ப்ளே (Body, Display):
ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும்.
அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.
Display Size என்பது உங்கள் விருப்பம். 5 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம்.
நினைவகம் (Memory) :
அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். Ram 1gb குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 4gb அவசியம்.
External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கேமரா (Camera):
பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.
Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.
வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.
ப்ராசஸர் (Processor):
மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 1.2ghz quad core ஆக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டரி (Battery) :
எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 2500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).
இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):
நீங்கள் வாங்கும் மொபைல் 4G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.
ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.
இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள். வேறு ஏதேனும் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று தோன்றினால் கமெண்ட் மூலம் சொல்லுங்கள். உங்களுக்கு வாங்குவதில்
சந்தேகம் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்
. நன்றி பிரபு Gadgetsnews7
நன்றி ஸ்ரீராம் அண்ணா
LIKE OUR FB PAGE TamilHackings.fb.com

Sunday, 20 September 2015

பிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள

பிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள

ஒவ்வொருவருக்கும் நமக்குரிய அதிஷ்டம் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதை  பிறந்த தேதி வைத்து,  நியூமராலஜி எனப்படும் எண்கணித முறைப்படி  அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக்கல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இந்த அதிர்ஷ்ட எண் வரும்படி அவர்களுக்கான எண்களைத் தேர்வு செய்து கொள்வதாலும், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட அதிர்ஷ்ட நிறங்களைத் தேர்வு செய்து கொள்வதன் மூலமும், அதிர்ஷ்டக்கல் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வதன் மூலமும் அதிர்ஷ்ட பலன்களை அடைய முடியும்.


இது போல் துரதிர்ஷ்டமான நிறங்கள், எண்களையும் ஒதுக்கி விட வேண்டும்.

பிறந்த தேதியும் அதிர்ஷ்ட,  துரதிர்ஷ்ட நிறங்களும் :

ஆங்கில தேதி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 1, 9
அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு, வெளிர்சிவப்பு, மஞ்சள், பொன்னிறம்
அதிர்ஷ்டக் கல் – தங்கம், மாணிக்கம்
துரதிர்ஷ்ட எண் – 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர்

ஆங்கில தேதி 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 7, 1
அதிர்ஷ்ட நிறம் – வெளிர் மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்டக் கல் – முத்து
தரதிர்ஷ்ட எண் – 9, 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம்

ஆங்கில தேதி 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 3, 1, 9
அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு, ரோஸ், தாமரைப்பூ நிறம்
அதிர்ஷ்டக் கல் – செவ்வந்திக்கல், புஷ்பராகம்
துரதிர்ஷ்ட எண் – 6
துரதிர்ஷ்ட நிறம் – கருநீலம், கருப்பு ஆழ்ந்த பச்சை

ஆங்கில தேதி 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 1, 9
அதிர்ஷ்ட நிறம் – வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்டக் கல் – கோமேதகம்
துரதிர்ஷ்ட எண் – 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு

ஆங்கில தேதி 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 5
அதிர்ஷ்ட நிறம் – சாம்பல்
அதிர்ஷ்டக் கல் – வைரம்
துரதிர்ஷ்ட எண் – இல்லை.
துரதிர்ஷ்ட நிறம் – பச்சை, கருப்பு

ஆங்கில தேதி 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 6, 9
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, மஞ்சள், ரோஸ்
அதிர்ஷ்டக் கல் – மரகதம்
துரதிர்ஷ்ட எண் – 3
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர்

ஆங்கில தேதி 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 2, 1
அதிர்ஷ்ட நிறம் – இலேசான மஞ்சள், வெளிர்பச்சை, நீலம், வெள்ளை
அதிர்ஷ்டக் கல் – வைடூரியம்
துரதிர்ஷ்ட எண் – 7
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, சிகப்பு

ஆங்கில தேதி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 1, 5
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், ஆழ்ந்த பச்சை, நீலம்
அதிர்ஷ்டக் கல் – நீலக்கல்
துரதிர்ஷ்ட எண் – 8
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர், சிவப்பு

ஆங்கில தேதி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட எண் – 9, 1
அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு, கருஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்டக் கல் – பவளம்
துரதிர்ஷ்ட எண் – 2
துரதிர்ஷ்ட நிறம் – வெளிர் பச்சை, வெண்மை மிகுந்த வர்ணம்
LIKE OUR FB PAGE TamilHackings.fb.com

Saturday, 19 September 2015

உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்!

உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்!



இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள்
மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.

ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.


லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்குப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.


நன்றி தமிழ்திரை

LIKE OUR FB PAGE TamilHackings.fb.com



தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்


தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்


1. Thiruvallur Collector 9444132000

044 27661600 27662233 27662299

2. Chennai 9445419966 9444131000

044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025

3. Kancheepuram Collector 9444134000

044 27237433 27238478 27238477

4. Vellore Collector 9444135000

0416 2252345 2252501 2222000 2253034 2228029

5. Krishnagiri Collector 9444162000

04343 239500 239400 239100 239300

6. Dharmapuri Collector 9444161000

04342 230500 232300 232800/ 230886

7. Tiruvannamalai Collector 9444137000

04175 233333 233366 232222

8. Villupuram Collector 9444138000

04146 222450 222480 222470

9. Namakkal Collector 9444163000

04286 281101 280111 280222 281106

10. Salem Collector 9444164000

0427 2452233 2452244 2400200 2400700 2452960

11, Erode Collector 9444167000

0424 2266700 2262444 2261444

12. .The Nilgiris Collector 9444166000

0423 2442344 2442233 2443971

13. Coimbatore Collector 9444168000

0422 2301320 2213230 2301523

14. Dindigul Collector 9444169000

0451 2461199 2432600 2432133/ 2467082

15. Karur Collector 9444173000

04324 257555 257112 255444 257800

16. Tiruchirapalli Collector 9444174000

0431 2415358 2420681 2420181 2411929

17 Perambalur Collector 9444175000

04328 276300 224200 277875

18. Ariyalur Collector

04329 223351 223331

19. Cuddalore Collector 9444139000

04142 230999 230651-55 230666/ 230777 230555

20 Nagapattinam Collector 9444176000

04365 252700 247800 247400 253048

21. Thiruvarur Collector 9444178000

04366 223344 225142 224738 221033

22. Thanjavur Collector 9444179000

04362 230121 230201 230857 230627

23. Pudukkottai Collector 9444181000

04322 21663/ 221624 221690 221690

24. Sivaganga Collector 9444182000

04575 241466 241455 241581 241581

25, Madurai Collector 9444171000

0452 2531110 2532290 2530925

26. Theni Collector 9444172000

04546 253676 253626 253626

27. Virudhunagar Collector 9444184000

04562 252525 252345 252500

28. Ramanathapuram Collector 9444183000
04567 231220 221349 230558

29. Thoothukudi Collector 9444186000

0461 2340600 2320050 2326747 2340606

30. Kanniyakumari Collector 9444188000

04652 279555 260666 260999 260999

தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் கடைசியாக உள்ளது

~~~~~~~~~~~~~~~ நன்றி   புரட்சி எப்.எம்
LIKE OUR FB PAGE TamilHackings

Thursday, 17 September 2015

பிறப்பு இறப்பு சான்றதழ் இலவசமாக இனணயதளத்தில் பெறுவது எப்படி?


இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.


இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.

அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.

அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
கிளிக் பன்னுங்க


உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - கிளிக் பன்னுங்க

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - Click Here

உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - CLICK HERE

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth CLICK HERE BIRTH CERFICATE LINK 1
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - Click here Death cerficate Link 2

மதுரை ஆட்களுக்கு - Click Here (NO DNS so use the same format)

திருச்சி ஆட்களுக்கு - Click

திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - Click பன்னுங்க
 LIKE OUR FB PAGE TamilHackings
பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவதுபற்றிய முந்தைய  பதிவிற்கு செல்ல CLICK HERE TO

Wednesday, 16 September 2015

பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்



பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாரு தத்தாத்ரேயா இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாக யூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும், சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களை மொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும். இதுதவிர, ஈ.பி.எப். பென்சன் பெறுபவர்கள் பென்சன் விபரங்களை மொபைலிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் வாயிலாக சந்தாதாரர்கள் தங்களது பி.எப். இருப்பு தொகையையும் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதியின் வாயிலாக 3.54 கோடி பி.எப். சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள். 49.22 லட்சம் பென்சன்தாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாக இருக்கும். அதேபோல், 6.1 லட்சம் நிறுவனங்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என மத்திய மந்திரி தத்தாத்ரேயா தெரிவித்தார். இந்த அப்ளிகேஷனை இ.பி.எப்.ஓ. இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம். அல்லது இங்கே கிளிக் செய்து டவுன்ேலாட் செய்து கொள்ளலாம்
உங்கள் நண்பர்களுக்கும் பகரவும்
நமது FB PAGE க்கு செல்ல தமிழ் ஹேக்கிங்ஸ்

Tuesday, 15 September 2015

மாதம் 300 ருபாய் உங்கள் ஸ்மார்ட்போன் ரீசார்ஜ் செய்யணுமா ?கதையல்ல நிஜம்! !


மாதம் 300 ருபாய் உங்கள் ஸ்மார்ட்போன் ரீசார்ஜ் செய்யணுமா ?


இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நபர் நெட் கார்டு மற்றும் பேச ரீசார்ஜ் செய்ய மாதம் 300 ரூபாய் ஆகும் என்பது என் கணிப்பு. இதையே நீங்கள்இலவச ரீசார்ஜ் பெற முடியும் என்றால் யார் வேண்டாம் என்பார்கள்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Earn Talktime ஆப் டவுன்லோட் செய்யுங்கள். அப்படி என்ன தான் இந்த ஆப் செய்கிறது என்றால் உங்களை மேலும் சில ஆப் எனப்படும் அப்ப்ளிகேசன்களை டவுன்லோட் செய்ய சொல்லும். நீங்கள் டவுன்லோட் செய்யும் ஆப் எனப்படும் அப்ப்ளிகேசனிற்கு 15  ரூபாய் வரை நீங்கள் பெறலாம். மேலும் உங்கள் நண்பர்களை சேர்த்து விட்டு 100 ருபாய் வரை உடனடியாக பெறலாம். 1 மணி நேரத்தில் எளிதாக 50 ரூ முதல் 100 ரூ வரை சேர்த்து ரீசார்ஜ் செய்யலாம். நீங்கள்  இலவச ரீசார்ஜ் செயத பிறகு அன்-இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.



 பொதுவாக இது போன்ற ஆப்கள் ஏமாற்று வேலை என கருதி நான் மற்றவர்களுக்கு சொல்லுவதில்லை. ஆனால் Earn Talktime இலவச ரீசார்ஜ் ஆப் மிகவும் நண்பகமானது என்பதை நான் பயன்படுத்தி பார்த்துள்ளேன். நீங்கள் ரீசார்ஜ் செய்ய சூப்பர் ஆப்.


உங்கள் போனில் டவுன்லோட் செய்ய , கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
  mCLICK TO DOWNLOAD EARN TALKTIME APPLICATION








நீங்கள் செய்ய வேண்டியது
1. Earn Talk Time



உங்கள் போனில் டவுன்லோட் செய்ய , கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
  DOWNLOAD EARN TALKTIME APPLICATION

Earn Talktime இலவச ரீசார்ஜ் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்


Offers பகுதியில் உங்களுக்கு தேவையான ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.


ரீசார்ஜ் ருபாய் உங்கள் கணக்கில் காட்டப்படும்.


உங்கள் நம்பருக்கோ அல்லது வேறொரு நம்பருக்கோ ரீசார்ஜ் செய்யலாம்.


நீங்கள் மேல் உள்ள இந்த ஆப் லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு  Offers பகுதிக்கு சென்று உடனடியாக ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள். மேலும் உங்கள் கணக்கில் 160 ரூபாய் வரும் போது கூடுதலாக 100 ரூபாய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறைய ரூபாய் சேர்ந்தால் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.      





2. Mcent


அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்ட  ஆப். அதிகம் ரூபாய் கொடுக்கும் ஆப் இதான்.  இதன் மூலம் பதிவு செய்த நம்பருக்கு 10 ருபாய் முதல் 300 ரூபாய்  ரீசார்ஜ் செய்யலாம்.


ஆப் இன்ஸ்டால் செய்ய லிங்க்:  CLICK TO DOWNLOAD MCENT APPLICATION



நீங்கள் மேல் உள்ள இந்த ஆப் லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு  Offers பகுதிக்கு சென்று உடனடியாக ஒரு ஆப்பை இனஸ்டால் செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணலாமே!!!!.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
CLICK TO LIKE OUR FB PAGE TamilHackings

Monday, 14 September 2015

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK


நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK


      ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா? 

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.

Sunday, 13 September 2015

‘இயர் போன்’ தரும் இன்னல்கள்,


இசையைக் கேட்பது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் ‘இயர் போன்’ அதற்கு சரியான உபகரணமாக அமைந்துவிடுவதில்லை. அதிலும் சாலையில் ‘இயர் போன்’ உதவியுடன் தன்னை மறந்து இசையை கேட்டபடி சென்றவர்கள் பலர் உலக வாழ்வுக்கு திரும்பாமலே உயிரை விட்டிருக்கிறார்கள். ஏனெனில் ‘இயர் போன்கள்’ அவர்களை வெளியுலக தொடர்பிலிருந்து துண்டித்து வேற்று உலகத்தில் சஞ்சரிக்க வைப்பதுதான் இந்த ஆபத்துக்கும், விபத்துக்கும் காரணம். இசை இனிமையை வழங்கவும், ‘இயர் போனை’ பாதுகாப்பாக பயன்படுத்தவும் இங்கே சில அனுபவங்கள் வழிகாட்டுகின்றன...


வாரணாசியில் டிரைவர் சர்விந்த் சிங், 12 பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு பயணித்தார். காதில் ‘இயர் போன்’ மாட்டி ஆனந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணித்த அவருக்கு தூரத்தில் வந்த ரெயிலின் ஹாரன் ஒலி துளியும் கேட்கவில்லை. எதையும் கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க, வேகமாக வந்த ரெயில் பள்ளி வேனை பந்தாடியது. தூக்கி எறியப்பட்ட வண்டியில் இருந்த பள்ளிப் பிள்ளைகள் பலர் மாண்டனர். காதிற்குள் கேட்ட இசையொலி, வெளியில் இருந்து வந்த ஒலியை தடை செய்ததால் பல மாணவ ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டன.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரைவர் மயக்கம் தெளிந்து கேட்ட கேள்வி, ‘இன்னுமா நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு வேண்டாம் இந்த உயிர். என்னைக் கொன்று விடுங்கள்’ என்று கதறியழுதார்.

இது மட்டும் உதாரணமல்ல, இன்னும் ஏராளம் இருக்கிறது. பாட்டுக் கேட்டுக் கொண்டே சாலையை கடந்த பள்ளிச் சிறுவர்கள்கூட லாரியில் அடிபட்டு இறந் திருக்கிறார்கள். ரெயில்வே கேட்டில் காத்திருக்க பொறுமையின்றி, ‘இயர் போன்’ மாட்டியபடி தண்டவாளத்தை கடந்த பலர், ரெயிலின் ஹாரனும், பக்கத்தில் நின்றவர்கள் கத்தும் குரலும் கூட கேட்காமல் விபத்தில் சிக்கி உயிரை விட்டிருக்கிறார்கள்.

ஏன் இந்த அவலம்? யார் மீது குற்றம்? இதிலிருந்து மீள என்னதான் வழி?

அஜாக்கிரதையாக இருப்பதைவிட்டுவிட்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். அதற்கு ‘இயர் போன்’ களால் ஏற்படும் பாதிப்புகளின் பட்டியலை கொஞ்சம் கவனியுங்கள்...

 பாட்டுப் பிரியர்களுக்கு ‘இயர் போன்’ மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் காதுகளுக்கு மிக ஆபத்தானது. உயிருக்கே உலை வைத்த செய்திகளையும் அன்றாடம் படிக்கிறோம். ‘இயர் போன்கள்’ காதுக்குள்ளே புகுந்து இசையால் காதை அடைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட 70 சதவீதம் காதுகளை ஆக்கிரமித்து கொள்வதால் வெளி விஷயங்கள் எளிதில் காதில் புக முடிவதில்லை.

 ‘இயர் போன்கள்’ பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவதுதான். பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். ‘இயர் போன்’ இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது. அந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது.

 நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் ‘இயர் போன்’ மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள்.

 ‘இயர் போன்’களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல. அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் குறையும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும்.

 தகவல் தொடர்பு மையங்களான ‘கால் சென்டர்’களில் வேலை செய்பவர்கள் ‘இயர் போன்’களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டே ஆக வேண்டும். அது அவர்கள் பணி. அவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேரத்தில் கொஞ்சம் சத்தத்தையாவது குறைத்து வைத்துக் கொள்ளலாம்.

 இன்று ‘இயர் போனை’ உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே ‘இயர்போனை’ இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள். அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் ‘இயர்போன்’ இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பதுதான் அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது. சர்விந்த் சிங் போலவே பாட்டுக் கேட்டபடி பயணிக்கும் பல டிரைவர்களும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இசை கேட்கும் நீங்கள், உங்கள் காதுகளின் அழுகுரல் ஓசையையும் கொஞ்சம் கேளுங்கள். ‘இயர் போன்’களால் ஏற்படும் இன்னல்களை தெரிந்து கொண்ட பின் கொஞ்சம் உஷாராக இருக்கலாமே?

 வாழ்நாள் முழுவதும் நமக்கு காதுகள் தேவை. அதை பாதியிலேயே தொலைத்து விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது? ‘இயர் போன்’ கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள். இசையை ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ‘இயர் போன்’களுக்கு உங்கள் காதுகளை இரையாக்கி விடாதீர்கள்!
LIKE OUR FB PAGE TamilHackings


15000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இணையத்தின் ஊடாக இலவசமாக பார்க்க உதவும் இணையதளம்.

15000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இணையத்தின் ஊடாக பார்க்க உதவும் இணையதளம்.
/இணையத்தின் ஊடாக திரைப்படங்களை கண்டுகளிக்க உதவுகிறது Zero Dollar Movie எனும் இணையதளம்.





இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள அனைத்து திரைப்படங்களும் யூடியூப் தளத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதுடன் அவைகள் சிறு பகுதிகளாக அல்லாமல் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை முழுமையாக இயங்கக் கூடியவைகளாக அமைந்துள்ளன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைந்த 15000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்த தளத்தின் மூலம் பார்க்க முடியும்.


அத்துடன் 1949 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அவைகள் திரைக்கு வந்த ஆண்டுகளின் அடிப்படையிலும் அவைகள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.




எனவே இந்த தளத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உங்களுக்குத் தேவையான மொழியில் அமைந்த திரைப்படங்களை மாத்திரம் வேறாக தேடிப்பெருவதற்கும் அவைகள் திரைக்கு வந்த ஆண்டின் அடிப்படையில் தேடிப்பெறவும் முடியும்.

நன்றி Tamilinfotech

சந்தேகம்இருப்பின் கமான்ட் செய்யவும்
LIKE OUR FB PAGE  TamilHackings

Saturday, 12 September 2015

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் பல வசதிகள் இருந்தாலும் இரண்டு பலவீனம் இருக்கு. ஒன்று பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். மற்றொன்று சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும். இந்த இரண்டு சிக்கல்களை தீர்க்கும் வகையில் பேட்டரி சேமிப்பை அதிகபடுத்தியும் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய மொபைல்கள் தற்போது வர தொடங்கி உள்ளது. இருப்பினும் இன்று நான் தரக்கூடிய டிப்ஸ் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.

1.  ஃப்ளைட் மோட் அல்லது ஏரோபிளான் மோட்


உங்கள் மொபைலை Aeroplane மோடில் சார்ஜ் செய்யுங்கள். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை நார்மல் மோடிலிருந்து Aeroplane மோடுக்கு மாற்றுவதால் பல அப்ளிகேஷன்கள் பேட்டரி சேமிப்பை விரையமாக்காது.  எனவே மிக விரைவாக சார்ஜ் ஆகும். பலர் சார்ஜ் செய்யும் போது மொபைலை ஆப் செய்து சார்ஜ் செய்கிறார்கள். அதுவும் நல்ல ஐடியாதான். ஏரோபிளான் மோட் மாற்றி சார்ஜ் செய்தால் மேலும் பெட்டர். இது போல செய்வதால் எந்த பலவீனமும் மொபைலுக்கு வராது ஆனால் அழைப்புகளை பெற இயலாது. உங்கள் மொபைலின் Quick Settings மெனுவில் Aeroplane என்பதை ஒரு டச் செய்யுங்கள். உங்கள் நெட்வொர்க், வைஃபை என அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டு விரைவான சார்ஜ் ஆக வழிவகை செய்யும்.

கீழே மேலும் சில டிப்ஸ் தருகிறேன் பயன்படுத்துங்கள்:

2. சார்ஜர் மூலம் மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.
இப்ப பெர்சனல் கணினி அல்லது லேப்டாப் வைத்து இருப்பவர்கள் தங்கள் கணினியில் உள்ள யு‌எஸ்‌பி போர்ட் மூலம் சார்ஜ் செய்கிறார்கள். இது மொபைலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். கணினியில் உள்ள USB 2.0 வெறும் .5 முதல் 2.5 வாட்ஸ் வரை மட்டுமே மின் கடத்தும் எனவே சார்ஜ் ஆக நேரம் ஆகும் மேலும் உங்கள் மொபைல் நாளுக்கு நாள் பலவீனமடையும் வாய்ப்பு அதிகம்.

3. பவர் சேவர் மோட்
இரவு நேரங்களில், மொபைலை அதிகம் பயன்படுத்தாத நேரங்களில் மொபைலை Power Saver மோடுக்கு மாற்றி விடுங்கள். இதனால் 35% கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இருக்கிறது.

4. தேவை இல்லாத வசதிகளை ஆப் செய்யுங்கள்
நம் மொபைலில் எப்போதாவது பயன்படுத்தும் ஆப் நிறைய இருக்கு. சான்றாக Bluetooth, GPS, Wi-Fi, Printer, NFC போன்றவற்றை ஆப் செய்து வைப்பதே நல்லது. தேவைப்படும் போது மட்டும் அதனை பயன்படுத்திகிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும்.
நன்றி தகவல் குரு குழுமம்

இதை தவிர திறந்த அனைத்து அப்ளிகேசனையும் குளோஸ் செய்ய மறக்காதீங்க. தேவைப்பட்டால் Greenify App  பயன்படுத்துங்கள்.

LIKE OUR FB PAGE TamilHackings

ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி
?

Download Facebook Videos in Smartphone | ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?
நா சுத்தி வளச்சு பேச விரும்பல, நீங்க ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை நிறைய பார்ப்பீர்கள் ஆனால் பேஸ்புக்கில் நேரடியாக டவுன்லோட் ஆப்சன் இயலாத காரியம்.



இதற்காக நீங்கள் வேறொரு பேஸ்புக் அப்ப்ளிகேசன் டவுன்லோட் செய்யாமல், நீங்கள்ES File Manager  பயன்படுத்தினால் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.



ES File Manager பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?



1. ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பார்க்கும் பேஸ்புக் வீடியோவுக்கு ஒரு comment போடுங்கள்



2. இப்போது  பேஸ்புக்கில் உங்கள் Activity Log செல்லுங்கள்.



3. அங்கு நீங்கள் comment செய்ததை கிளிக் செய்யுங்கள்.  



4. இப்போது Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் ES Downloader செலக்ட் செய்து டவுன்லோட் செய்யலாம்.



ஒரே அப்ப்ளிகேசனில் இரண்டு வேலை…..
     
                மற்றுமொரு முறை

ii)  Crome browser மூலம் Facebook செல்பவர்கள் mobile screen ல் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் video மீது அழுத்தும் பொழுது "save this video" என்கிறoption வரும். அதை select செய்வதன் மூலம் அந்த video ஐ download செய்யலாம்





பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
LIKE OUR FB PAGE TamilHackings

Friday, 11 September 2015

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி

நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை. முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில்


Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.





இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.


இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.


எப்படி pen drive ஐ பாதுகாப்பது??


1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )

2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.

3 . மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள். தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.

4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்செய்யலாம்
.

5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.

6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.
LIKE OUR FB PAGE TamilHackings
நாம் நமது முந்தைய பதிவில் வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழிகளை பற்றிய பதிவினை பகிர்ந்தோம் அதனை அறிய கிளிக் செய்வும்

Thursday, 10 September 2015

நமது கம்யூட்டரினை Software எதுவும் இல்லாமல் Folder லாக் செய்யலாம்.


நமது கம்யூட்டரினை Software எதுவும் இல்லாமல் Folder லாக் செய்யலாம்.


நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.



முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password here என்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.
இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும். (Ex: yourname.bat)
இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும்.
அதை click செய்யவும் இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும்.
புதிய ஃபோல்டரில் உங்கள் பெர்சனல் File களை copy செய்யவும்.
இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள் yourname ஐ click செய்து ஓபன் செய்யவும்.
இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் மறைந்து இருக்கும்.
மீண்டும் yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.
இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம்.
உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives". }
நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம்.